ஜார்ஜியாவில் ஒயினை வைத்து செஸ் விளையாடிய வீடியோ வைரல்

Aug 03, 2018 04:19 PM 635

ஜார்ஜியா நாட்டில் பிரபல ஒயின் தயாரிக்கும் நிறுவனம் தனது தயாரிப்பை விளம்பரப்படுத்தும்விதமாக, வித்தியாசமான செஸ் போட்டியை நடத்தியது. செஸ் காய்களுக்கு பதிலாக அந்தந்த விடிவிலான கண்ணாடி குவளையில் ஒயினை நிரப்பி விளையாடப்பட்டது. இந்த போட்டியை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் பெண்ணும், முன்னாள் செஸ் சாம்பியனான நோனா கப்ரிண்டஷ்விலி (nona gaprindashvili) மற்றும் முன்னாள் ஆண்கள் செஸ் சாம்பியன் சுரப் அஸ்மைபரஷ்விலி (Zurab Azmaiparashvili) ஆகியோர் விளையாடினர். இந்த செஸ் போட்டி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஒயினை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஜார்ஜியா முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted