விஜய் மல்லையாவை நாடு கடத்தும் நடவடிக்கைகளை தொடங்கவில்லை - மத்திய அரசு பதில்

Oct 05, 2020 10:03 PM 1483

விஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டும், அதற்கான நடவடிக்கைகளை தொடங்கவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, விஜய் மல்லையாவை நாடு கடத்தும் ரகசிய பணிகளில் இங்கிலாந்து அரசு ஈடுபட்டிருப்பதாக கூறப்படுவது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என தெரிவித்தார். இதனையடுத்து வழக்கை நவம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Comment

Successfully posted