தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக விஜய் மல்லையா: மும்பை சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு

Jan 05, 2019 05:45 PM 385

தொழிலதிபர் விஜய் மல்லையாவை தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக மும்பை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாயை கடனாக பெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, அவற்றை திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டு வெளியேறினார். தற்போது, பிரிட்டனில் உள்ள அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இந்நிலையில், விஜய் மல்லையாவை தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கக் கோரி மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி எம்.எஸ். அஸ்மி, விஜய் மல்லையாவை தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்தார். அவரது சொத்துக்களை பறிமுதல் செய்வது தொடர்பான விசாரணையை அடுத்த மாதம் 4ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக இந்தியாவில் அறிவிக்கப்படும் முதல் நபர் விஜய் மல்லையா என்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted