‘அரசியல்’ களத்தில் விஜய் சேதுபதி - வெளியானது சங்கத்தமிழன் Trailer

Sep 20, 2019 07:18 PM 356

விக்ரம் நடித்த ‘ஸ்கெட்ச்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நிவேதா பெத்துராஜ், ராஷிகன்னா ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் “சங்கத்தமிழன்”.விவேக் மெர்வின் இசையமைத்துள்ள இந்த படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியானது. இதனை தொடர்ந்து “கமலா கலசா” பாடல் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படமானது அக்டோபர் 4ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சங்கத்தமிழன் படத்தின் ட்ரெய்லர் தற்சமயம் வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லரில் அரசியல் பின்னணியில் கதையின் நாயகனாக விஜய் சேதுபதி தோன்றியுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த படம் விஜய் சேதுபதிக்கு வெற்றியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சங்கத்தமிழன் Trailer வீடியோவில் காண: https://youtu.be/4X2S9Tim_vc

Comment

Successfully posted