ட்விட்டரில் ட்ரெண்டாகும் #RIPactorVIJAY... கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்

Jul 29, 2019 02:06 PM 1246

தென்னிந்திய தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித் குமார். இவர்கள், இருவரின் படங்கள் திரையரங்களில் வெளியாகும்போது ரசிகர்கள் திருவிழாவைப் போல் கொண்டாடுவார்கள். மேலும், படத்திற்கான பூஜை துவங்கியது முதல் படப்பிடிப்பு முடியும் வரை ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து தங்களது பலத்தை காட்டுவார்கள். அதேசமயம், சமூக வலைளதங்களில் குறைந்த மணிநேரத்தில் யார் அதிக லைக்குகள் பெறுவதையெல்லாம் ட்ரெண்ட் ஆக்குவார்கள்.

இந்நிலையில், பிரபல சமூக வலைதளமான டுவிட்டரில், நடிகர் விஜய்யை, #RIPactorVIJAY என கலாய்த்து ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். நடிகர் விஜய் மற்றும் அஜித் இருவரும் தங்களது வேலையை மட்டும் பார்த்து வரும் நிலையில், ரசிகர்கள் மிகவும் கீழ்த்தரமாக இதுபோன்று செயல்களில் ஈடுபடுவது சமூக ஆர்வலர்களிடையே கடும் எதிர்ப்பை பெற்று வருகின்றனர்.

ஏற்கனவே, கடந்த மாதம் விஜய் பிறந்த நாளன்று, இதேபோன்று ஹேஷ்டாக்கை, அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்த நிலையில், அஜித் ரசிகர்களுக்குள் இடையிலே எதிர்ப்பு கிளம்பியதால், ட்ரெண்ட் செய்து வந்த ஹேக்டாக்கை நிறுத்தினர். பின்னர், “என்றும் தல அஜித்” என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்ய தொடங்கினர்.

இந்நிலையில், விஜய், அஜித் பிரச்சனை சில நாட்கள் ஓய்ந்திருந்த நிலையில், தற்போது #RIPactorVIJAY என்ற ஹேஷ்டாக் விஜய் ரசிகர்கள் மத்தியில் பூதாகரமாக வெடிக்க தொடங்கி உள்ளது.

இதற்கிடையே, #RIPactorVIJAY என்ற ஹேஷ்டாக் ஒருபுறம் ட்ரெண்ட் ஆக, விஜய் ரசிகர்கள் இதற்கு பதிலளிக்கும் வகையில் #LongLiveVIJAY என்ற மற்றொரு ஹேஷ்டாக்கை ட்ரெண்ட் செய்ய தொடங்கி உள்ளனர்.

Comment

Successfully posted