நீண்ட நாட்களுக்கு பின் கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய விஜயகாந்த்

Sep 16, 2019 09:12 AM 220

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நீண்ட நாட்களுக்குப் பிறகு திருப்பூரில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

தேமுதிக 15ஆம் ஆண்டு தொடக்க விழா, விஜயகாந்த் பிறந்த நாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா திருப்பூரில் நடைபெற்றது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் நீண்ட நாட்களுக்குப் பிறகு கட்சிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேச இருந்ததால், தொண்டர்கள் ஏராளமானோர் கூட்டத்திற்கு வந்திருந்தனர். நிகழ்ச்சியில் விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ், விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், அடுத்த முறை ஒருமணி நேரம் பேசுவதாகவும் தெரிவித்தார்.

Comment

Successfully posted