ஆண்பாவம் படத்தில் நடித்த கிராமியப் பாடகி விபத்தில் சிக்கினார்!

Jun 28, 2020 04:13 PM 3588

ஆண்பாவம் படத்தில் நடித்த கிராமிய பாடகியான கொல்லங்குடி கருப்பாயி, விபத்தில் சிக்கிய நிலையில், வறுமை காரணமாக அறுவை சிகிச்சை செய்ய பணமின்றி தவித்து வருகிறார். சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியை சேர்ந்த கிராமியப் பாடகியான கருப்பாயி, ஆண்பாவம், ஆயுசு 100, கோபாலா கோபாலா போன்ற படங்களில் நடித்துள்ளார். கிராமியப் பாடகியான இவர் கலைமாமணி விருதும் பெற்றுள்ளார். இந்த நிலையில், கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, இருசக்கர வாகனம் அவர் மீது மோதியதால், அவரது கால் எலும்பு முறிந்தது. காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மருத்துவ செலவுக்கு பணம் இல்லாத காரணத்தால், அறுவை சிகிச்சை செய்து கொள்ளாமல், கட்டு மட்டும் போட்டுக் கொண்டு வீடு திரும்பினார்.

Comment

Successfully posted