மனைவி வீட்டார் நிலத்தை விற்றதில் 2 கோடி - உல்லாச வாழ்க்கை உதவி ஆய்வாளர்...

Jun 18, 2021 11:17 AM 2289

விழுப்புரத்தில் பல பெண்களிடம் உல்லாசமாக இருப்பதற்காக, தன்னோடு இணைந்து வாழ மறுப்பதாக காவல் உதவி ஆய்வாளர் மீது மனைவி பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

image

விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருப்பவர் இளங்கோவன். இவருக்கும் புதுச்சேரியை சார்ந்த இந்துமதிக்கும் 2019 ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த 5 வது மாதத்திலேயே இளங்கோவனுக்கு பல பெண்களுடன் தொடர்பிருப்பது இந்துமதிக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக இருவருக்கும் மோதல் எழுந்த நிலையில், இளங்கோவன் இந்துமதியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்துமதியின் பெற்றோர் வழங்கிய நிலத்தை, 2 கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டு, இந்துமதியை விட்டு பிரிந்து உல்லாச வாழ்க்கையை இளங்கோவன் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. சேர்ந்து வாழ பலமுறை இந்துமதி அழைத்தும், இளங்கோவன் செவிசாய்க்காமல் இருந்துள்ளார். இதுதொடர்பாக மாவட்ட எஸ்.பி.யிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், எஸ்.பி. அலுவலத்தில் இந்துமதி தர்ணாவில் ஈடுபட்டார்.


image


Comment

Successfully posted