திருப்பரங்குன்றம் அருகே விதவிதமாக தயாரிக்கப்படும் கிறிஸ்துமஸ் குடில் பொம்மைகள்

Dec 04, 2018 01:09 PM 585

கிறிஸ்துமஸ் பண்டிகையோட்டி திருப்பரங்குன்றம் அருகே குடில் பொம்மைகள் தயாரிக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்த விளாச்சேரி கிராமத்தில் கிறிஸ்துமஸ் பொம்மைகள் விதவிதமாக தயாரிக்கப்படுகிறது. 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொம்மை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு தயாரிக்கப்படும் பொம்மைகள் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

அதேசமயம் இந்த ஆண்டு கன மழை வெள்ளத்தால் கேரளா பாதிக்கப்பட்டிருப்பதால் எதிர்ப்பார்த்த அளவு குடில் பொம்மைகள் விற்பனையாகவில்லை என்று குடில் பொம்மை தயாரிப்பாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 

Comment

Successfully posted