விராட் கோலி இந்திய கிரிக்கெட்டின் மிக முக்கியமான மனிதர்: கங்குலி

Oct 23, 2019 08:06 PM 258

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 39-வது தலைவராக சவுரவ் கங்குலி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கங்குலி, இந்திய கிரிக்கெட்டின் மிக முக்கியமான மனிதர் விராட் கோலி. நாளை அவரை சந்தித்து பேசுவேன். அவருக்கு என்ன தேவைப்படுகிறதோ, அதை நிறைவேற்றுவதற்கான சாத்தியமான எல்லா வழிகளிலும் நாங்கள் ஆதரவு அளிப்போம்.

மேலும், இந்திய அணியை வழிநடத்தியதைப் போலவே, இந்திய கிரிக்கெட் வாரியத்தையும் வழிநடத்துவேன். அதில், எந்த சமரசம் இல்லை. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை, எப்படி பிரபலம் ஆக்கலாம் என்பது குறித்து ஆராய வேண்டும். இந்திய அணியை புதிய நிலைக்கு விராட் கோலி அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, அவருடன் நாங்கள் இருந்தோம். இனியும் இருப்போம் என்று தெரிவித்தார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, தொடர்ச்சியாக சொந்த மண்ணியில் 11 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக நடைபெற்ற தென்னாப்பிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் முழுமையாக வெற்றிப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted