சச்சின் சாதனையை ஒவ்வொன்றாக தகர்த்தெறியும் விராட் கோலி

Oct 22, 2018 03:58 PM 664

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் கேப்டன் விராட் கோலி சச்சினை பின்னுக்கு தள்ளி உள்ளார்.

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி கவுகாத்தியில் நேற்று நடைபெற்றது. இதில், மேற்கிந்திய தீவுகள் அணி இலக்காக நிர்ணயித்த 323 ரன்களை அசால்ட்டாக அடித்து இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் கேப்டன் விராட் கோலி சதம் அடித்து 140 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டியில் 36-வது சதத்தை பதிவு செய்த கேப்டன் விராட் கோலி, குறைந்த இன்னிஸ்சில் சதமடித்து பட்டியலில் முதலிடத்தில் இருந்த கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கரை முந்தினார்.

சச்சின் டெண்டுல்கர் 426 இன்னிங்சில் 60 சதமடித்து இருந்தார். இந்தநிலையில் கேப்டன் விராட் கோலி 60 சதமடிக்க 386 இன்னிங்ஸ் மட்டுமே எடுத்துக் கொண்டார்.

Comment

Successfully posted