விரைவாக 10,000 ரன்கள் கடந்த முதல் வீரர் - கேப்டன் விராட் கோலி சாதனை

Oct 24, 2018 05:38 PM 463

விரைவாக 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை இந்திய கேப்டன் விராட் கோலி படைத்துள்ளார்.

தொடர்ந்து பல்வேறு சாதனைகளை கிரிக்கெட் உலகில் படைத்து வரும் விராட் கோலி, தற்போது மேற்கிந்தியா தீவுகள் அணியுடனான போட்டியில், 81 ரன்களை தொட்ட போது, விரைவாக 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

உலகளவில், 10 ஆயிரம் ரன்களை கடந்த 13-வது வீரர் என்ற சிறப்பையும் அவர் பெற்றுள்ளார். இந்திய அளவில் சச்சின், கங்குலி, டிராவிட், தோனியை தொடர்ந்து 5-வதாக இந்தச் சாதனையை அவர் படைத்துள்ளார்.

கோலி தனது 205 வது இன்னிங்ஸில் இந்த சாதனையை படைத்துள்ளார். இதன்மூலம் 17 ஆண்டு காலம் இந்திய ஜாம்பவான் சச்சின் வசம் இருந்த சாத்கனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.

Comment

Successfully posted