கங்குலியை பின்னுக்குத் தள்ளி விராட் கோலி புதிய சாதனை

Aug 12, 2019 11:59 AM 72

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய 2-வது ஒரு நாள் போட்டியின் போது, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 120 ரன்கள் குவித்து தனது 42-வது சதத்தை பூர்த்தி செய்தார். இந்த போட்டியில் 77 ரன்கள் எடுத்திருந்த போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் சாதனையை முறியடித்து, இந்திய ஜாம்பவான் சச்சினுக்கு அடுத்தபடியாக அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார்.

229-வது இன்னிங்ஸில் விளையாடி 11 ஆயிரத்து 406 ரன்கள் குவித்துள்ள கோலி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த பாகிஸ்தான் வீரரான ஜாவித் மியாண்டட்டின் சாதனையை வெறும் 34 இன்னிங்ஸிலே கடந்து சாதனை படைத்துள்ளார்.

இதேபோல் மேற்கிந்திய அணிக்கு எதிராக அதிக சதம் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனை பட்டியலில் சச்சினுக்கு அடுத்தப்படியாக உள்ளார். போட்டி நடந்த போர்ட் ஆஃப் ஸ்பெயினில் மேற்கிந்திய தீவுகள் வீரர் தவிர அதிக ரன்கள் குவித்த வெளிநாட்டு வீரராகவும், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 2 ஆயிரத்து 376 ரன்கள் குவித்துள்ள கோலி 10 சதங்களுடன் அதிக சராசரியை கொண்ட வீரராகவும் விளங்குகிறார். மேலும், கோலி அடித்துள்ள 42 சதங்களில் 33 சதம் அடித்த ஆட்டத்தில் இந்திய வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted