ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட் கோலி 2ஆம் இடம்

Oct 15, 2019 08:14 AM 154

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட்கோலி ஒரு புள்ளி வித்தியாசத்தில் 2 ஆம் இடத்தில் நீடிக்கிறார்.

புனேவில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியை இந்தியா வென்றதன் மூலம் தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி, ஆட்டமிழக்காமல் 254 ரன்கள் குவித்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை வெளியிட்டுள்ளது. இதில், கோலி 936 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 937 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். மற்ற இந்திய வீரர்களான புஜாரா 4 வது இடத்திலும், ரஹானே 9 வது இடத்திலும் நீடிக்கின்றனர். புனே டெஸ்டில் சதம் அடித்த மயங்க் அகர்வால், 8 இடங்கள் முன்னேறி 17 வது இடத்தை பிடித்துள்ளார். பந்து வீச்சாளர்களின் தரவரிசையில், பும்ரா 3 வது இடத்தில் நீடிக்கிறார். தமிழக வீரர் அஸ்வின் 7 வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். ஆல்ரவுண்டர் பட்டியலில், ஜடேஜா 2வது இடத்திலும் நீடிக்கிறார்.

Comment

Successfully posted