விஷால் என்னுடைய வாக்கை இழந்துவிட்டார் : வரலட்சுமி

Jun 14, 2019 08:48 PM 147

தனது தந்தை நடிகர் சரத்குமாரை, விஷால் தவறாக சித்தரித்ததற்கு கண்டனம் தெரிவித்து, நடிகை வரலட்சுமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகை வரலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் சங்கத் தேர்தலுக்கான பாண்டவர் அணியின் வீடியோ, தனக்கு மிகுந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியதாகவும், மிகவும் தரம் தாழ்ந்த முறையில் வெளியிட்டிருக்கும் இந்த வீடியோவால், விஷால் மீது இருந்த மரியாதை சுத்தமாக குறைந்துவிட்டது எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தனது தந்தையின் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்காமல், விஷால் இவ்வாறு பேசுவது வருத்தமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். விஷாலை பற்றி பலரும் சொல்லும் கருத்து தவறாக இருக்கமுடியாது என்றும் வரலட்சுமி சுட்டிக்காட்டியுள்ளார். இத்தனை காலமும் விஷாலை மதித்து வந்தேன், ஒரு தோழியாக விஷாலுக்கு ஆதரவாக இருந்தேன் என்று கூறியுள்ள அவர், திரைக்கு வெளியே விஷால் நல்ல நடிகர் என்றும், விஷால் என்னுடைய வாக்கை இழந்துவிட்டார் என்றும் கூறியுள்ளார்.

Comment

Successfully posted