போலியோவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கைப்பந்து போட்டி

Aug 26, 2019 08:44 AM 350

தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், போலியோவால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, மாநில அளவிலான கைப்பந்துப் போட்டிகள் நடைப்பெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் கோவை, ஈரோடு, ராமநாதபுரம், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய எட்டு மாவட்டங்களில் இருந்து 80 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் முதல் பரிசை வென்ற கன்னியாகுமரி அணிக்கு ரொக்க பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

Comment

Successfully posted