தமிழகம் முழுவதும் நாளை வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் தொடக்கம்

Aug 31, 2019 12:28 PM 147

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நாளை முதல் ஒருமாத காலம் மேற்கொள்ளப்படுகிறது

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வாக்காளர் பட்டியலில் பெயர், முகவரி உள்ளிட்டவற்றை திருத்தம் செய்வதற்கான வாக்காளர் சரிபார்ப்புத் திட்டம் நாளை தொடங்கி 30ம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தை பல்வேறு வழிகளில் மேற்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

அதன்படி 1950 என்ற தொலைப்பேசி எண் மூலமாகவும் வாக்காளர் உதவி அலைபேசி எனப்படும் மொபைல் ஆப் அல்லது எண்.எஸ்.வி.பி எனும் தேசிய வாக்காளர் சேவை வலைத்தளம் மூலமாகவும் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Comment

Successfully posted