காஷ்மீரில் 5வது கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு

Nov 29, 2018 11:51 AM 303

காஷ்மீரில் 5வது கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

காஷ்மீரில் சில தினங்களுக்கு முன்பு சட்டப்பேரவை கலைக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே, மாநிலத்தில் 9 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலை புறக்கணிக்க பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்துள்ள போதிலும் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

முன்னதாக 17, 20, 24, 27 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களா தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று 5வது கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு துவங்கியுள்ள வாக்குப்பதிவு பிற்பகல் 2 மணிவரை நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

Comment

Successfully posted