காஷ்மீரில் 6-ம் கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு

Dec 01, 2018 10:06 AM 506

காஷ்மீரில் 6-ம் கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.

காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தலை 4 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டது. எனினும், தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக 9 கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 6வது கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. ஸ்ரீநகரில் உள்ள ஹர்வான், மல்கார் பகுதியில் உள்ள உதம்பூர் ஆகிய பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால், மக்கள் அச்சமின்றி வாக்களித்து வருகின்றனர். இந்த தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை மட்டுமே போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

 

Comment

Successfully posted