வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட உத்தரவு

Aug 18, 2018 01:22 PM 444

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  வைகை அணையிலிருந்து பெரியாறு பாசனப் பகுதியில் ஒரு போக பாசனத்துக்கும்,  திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கும், தண்ணீர் திறந்துவிட வேளாண் மக்களிடமிருந்து கோரிக்கை வந்ததாக கூறியுள்ளார். இந்த கோரிக்கையை ஏற்று , பெரியாறு பாசனப் பகுதியில்  85 ஆயிரத்து 563 ஏக்கர் நிலங்களுக்கும், திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள 19 அயிரத்து 439 ஏக்கர் நிலங்களுக்கும், வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தர விட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
வினாடிக்கு ஆயிரத்து 130 கனஅடி வீதம், மொத்தம் 8 அயிரத்து 461 மில்லியன் கனஅடிக்கு மிகாமல், 20ஆம் தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இதன் மூலம் மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.  

Comment

Successfully posted