ஒரிசா, மே.வங்கம் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல மீனவர்களுக்கு எச்சரிக்கை

Nov 09, 2019 05:41 PM 101

வெப்பச் சலனத்தால் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் உள் மாவட்டம் மற்றும் தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், புல்புல் புயல் காரணமாக ஒரிசா, மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேசத்தை ஒட்டியுள்ள கடற்கரை பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted