மேட்டூர் அணைக்கான நீர் வரத்து சரிவு

Aug 02, 2018 01:57 PM 850

கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளுக்கு  நீர்வரத்து குறைந்தது. இதனால் அந்த அணைகளில் இருந்து  தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டது. இதனால் இன்று  நீர்வரத்து மேலும் சரிந்து 14 ஆயிரத்து 661 கன அடியாக குறைந்தது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவும் 18 ஆயிரத்து 400 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து 119 புள்ளி 98 அடியாக உள்ளது. கடந்த மாதம் 24ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 புள்ளி 04 அடியாக உயர்ந்தது. அப்போது அணைக்கு நீர்வரத்து 75 ஆயிரத்து 170 கன அடியாக இருந்தது. முன்னதாக டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் கடந்த 19ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted