கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு

Dec 14, 2019 10:53 AM 309

ஆந்திரா மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து, தமிழகத்திற்கு 2 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, கிருஷ்ணா நிதி நீர் மூலம், ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் திறக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து, இந்தாண்டு 3 டிஎம்சி தண்ணீர் பெறப்பட்டுள்ளதாகவும், தற்போது கண்டலேறு அணையில் இருந்து விநாடிக்கு 2 ஆயிரம் கன நீர் திறக்கப்பட்டு, தமிழக எல்லையான ஜீரோ பாயிண்ட்டுக்கு 500 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comment

Successfully posted