தொடர் மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்

Aug 18, 2019 05:28 PM 49

விடுமுறை தினம் காரணமாக, குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்த சூழ்நிலையில் வெளி ஊர்களில் இருந்தும் வெளி மாநிலத்தில் இருந்தும் இங்கு குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் படையெடுக்க தொடங்கினர். இன்று விடுமுறை தினம் என்பதால் குற்றாலம் மெயின் அருவியில் மக்கள் கூட்டம் அலைமோதியது.வெகு நேரமாக சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

Comment

Successfully posted