மக்கள் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையில் நீர் திறப்பு!

May 28, 2020 10:40 AM 951

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதியில் இருந்து, ஆண்டுக்கு 12 டி.எம்.சி தண்ணீர் தமிழகத்திற்கு வழங்க வேண்டும். இந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந் தேதி கண்டலேறு அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டு, இந்த ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி வரை 7 புள்ளி 556 டிஎம்சி நீர் வழங்கப்பட்டது. தற்போது கோடை வெயிலின் தாக்கத்தால் சென்னை மக்களுக்கு குடிநீர் தேவையை அறிந்த தமிழக அரசு மீண்டும் கண்டலேறு அணையில் இருந்து நீர் திறக்க கோரிக்கை விடுத்தது. இதையடுத்து ஆந்திராவில் இருந்து ஆயிரத்து 200 கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டு இன்று இரவுக்குள் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டை வந்தடையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comment

Successfully posted