பவானி சாகர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

Aug 01, 2018 02:45 PM 719

கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள கபினி உள்ளிட்ட அணைகள் நிரம்பின. இதனால் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்ட நீரால், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பின. இந்தநிலையில், ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணை நிரம்பும் நிலையில் உள்ளது.  இந்த அணையிலிருந்து கீழ்பவானி கால்வாய் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன், கருப்பண்னன், மாவட்ட ஆட்சியர் பிரபாகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Comment

Successfully posted