அதிமுக சார்பில் மக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமைப்பு!

Apr 11, 2021 10:15 PM 4125

அனைத்து தரப்பு மக்களும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என்று விரும்புவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரை பைப்பாஸ் சாலையில் பொதுமக்கள் நலனுக்காக மோர் பந்தலை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் கூறினார்.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த வானூரில் அதிமுக சார்பில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் குடிநீர், மோர், இளநீர், தர்பூசணி உள்ளிட்டவை வழங்கப்பட்டன. சட்டத்துறை அமைச்சர் அறுவுறுத்தலின் பேரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி பொதுமக்களுக்கு மோர் வழங்கினார். ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து நகர செயலாளர் வழக்கறிஞர் தீனதயாளன் தலைமையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த சுங்கம் பகுதியில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. பொதுமக்கள் நலனுக்காக அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு திறந்து வைத்தார். அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலால் அப்பகுதியை சேர்ந்த அனைத்து தரப்பு மக்களும் பயனடைந்தனர்.


விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவுறுத்தலின் பேரில், வளத்தி, நீலாம்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றிய செயலாளர் புண்ணியமூர்த்தி தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு தர்பூசணி, மோர், கபசுரக் குடிநீர் உள்ளிட்டவற்றை வழங்கினார். இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நகர அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு மோர் விநியோகம் செய்யப்பட்டது. ஆரணியில் அண்ணா மற்றும் எம்ஜிஆர் சிலைகள் அருகே அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் திறந்து வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு இளநீர், மோர், பழங்கள், குளிர்பானங்கள் ஆகியவை வழங்கப்பட்டன.

சென்னை சாலிகிராமம் பகுதியில், கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் விதமாக, நீர் மோர் பந்தலை மாவட்ட செயலாளர் விருகை ரவி திறந்து
வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு மோர், இளநீர், ரோஸ்மில்க், நுங்கு மற்றும் பழங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. தொகுதி முழுவதும் மக்களின் தாக்கம் தீர்க்க கோடை காலம் முழுவதும் நீர்மோர் பந்தல் செயல்படும் என்று மாவட்ட செயலாளர் விருகை ரவி தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில், எம்ஜிஆர் சிலை அருகே அதிமுக மாவட்ட செயலாளர் தூசி மோகன் எம்.எல்.ஏ, தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில், நீர்மோர், தர்பூசணி, பப்பாளி உள்ளிட்டவற்றை அவர் வழங்கினார். ஒன்றிய செயலாளர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

தென் சென்னை தெற்கு கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், அதிமுக சார்பில் பொதுமக்கள் நலனுக்காக, நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. மயிலாப்பூர், பசுமைவழிச் சாலை, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில், நீர் மோர் பந்தலை, மாவட்ட செயலாளர் அசோக் திறந்து வைத்தார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு மோர், இளநீர், ரோஸ் மில்க், நுங்கு, பழங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

Comment

Successfully posted