குற்றால அருவியில் தண்ணீர் வரத்து குறைவு..

Aug 03, 2019 03:11 PM 354

குற்றால அருவியில் தண்ணீர் வரத்து குறைந்ததால், கேரள மாநிலம் ஆரியங்காவு பாலருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே தமிழக - கேரள எல்லையில், ஆரியங்காவில் பாலருவி அமைந்துள்ளது. குற்றால சீசன் தாமதமாக தொடங்கியதால் குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளுக்கு வனப்பகுதியில் போதிய மழை இல்லாததால், அருவியில் நீர் குறைந்து உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

மேற்குத்தொடர்ச்சி மலையில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், குற்றாலத்தை விட பாலருவியில் தற்போது நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பாலருவியில் குடும்பத்துடன் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.

Comment

Successfully posted