பாபநாசம் அணையிலிருந்து 26-ம் தேதிக்குள் தண்ணீர் திறக்கப்படும்: ஆட்சியர்

Aug 19, 2019 04:16 PM 143

பாபநாசம் அணையிலிருந்து வரும் 26-ம் தேதிக்குள் விவசாயம் மற்றும் குடிநீர் பிரச்சனைகளை தீர்க்க ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். முன்னதாக பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

Comment

Successfully posted