கொரோனா வைரசை நாங்கள் உருவாக்கவில்லை!!!

Mar 26, 2020 06:53 PM 1551

கொரோனா வைரசை தாங்கள் உருவாக்கவில்லை என்று சீனா தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜி ரோங் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் ஜி ரோங், கொரோனா வைரசை சீன வைரஸ் என்று கூறுவது தவறு என்று கூறினார். கொரோனா வைரசை சீனா உருவாக்கவோ, உள்நோக்கத்துடன் பரப்பவோ இல்லை என்றும் அவர் கூறினார். உலக நாடுகள் சீனாவை குறை சொல்வதை விட்டு விட்டு, வைரசை எதிர்கொள்ள எப்படி துரிதமாக செயல்பட்டது என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஜி ரோங் கேட்டுக்கொண்டார். கொரோனா பாதிப்புக்காக பல்வேறு உதவிகளை இந்தியா வழங்கியதாகவும், அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

Comment

Successfully posted