"தறிகெட்டு ஓடும் திமுகவிற்கு கடிவாளம் போட வேண்டும்"-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

Feb 10, 2022 04:04 PM 7837

தறிகெட்டு ஓடும் திமுகவிற்கு கடிவாளம் போட வேண்டுமென்றால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்கு 100-க்கு 100 சதவீதம் வெற்றி வாய்ப்பை தர வேண்டும் என்று அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார். 

கோவை மாநாகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக சிவானந்தா காலனியில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

அதிமுக கொறடா எஸ்பி வேலுமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாக்கு சேகரித்தார். 

image

அப்போது பேசிய அவர், எந்த குறையும் சொல்ல முடியாத அளவிற்கு நல்லாட்சியை அதிமுக அரசு வழங்கியதாக தெரிவித்தார். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் திமுக நிறைவேற்றவில்லை என்பதை மக்கள் வேதனையோடு எண்ணி பார்த்து கொண்டு இருப்பதாகவும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

முன்னதாக பேசிய அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, பணத்தை மட்டுமே நம்பி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை திமுக எதிர்கொண்டுள்ளதாக கூறினார்.

வாக்காளர்களுக்கு பணத்தை கொடுப்பதற்காக, திமுகவினர் வெளியூர்களில் இருந்து ஆட்களை இறக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Comment

Successfully posted