2 நாட்களுக்கு மக்கள் வெளியில் வரவேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை!

May 22, 2020 01:39 PM 556

அம்பன் புயல் ஈரப்பதத்தை எடுத்துச் சென்றதால், தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அம்பன் புயல், மேற்கு வங்கத்தின் திகா கடற்கரை மற்றும் வங்கதேசத்தின் ஹட்டியா தீவுகளுக்கு இடையே கரையைக் கடந்தது. காற்றின் ஈரப்பதம் புயலால் ஊருஞ்சப்பட்டதால் தமிழகத்தில், காற்றில் வெப்பம் கலந்தே வீசுகிறது. தமிழகத்தில் நேற்று பெரும்பாலான இடங்களில் அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இதனால், வெப்பம் வழக்கத்தை விட அதிகமாகவே உணரப்பட்டது. இது 28 ஆம் தேதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடதமிழகத்தில் வெப்பநிலை உயர்ந்து வெப்பக்காற்று வீசும் என்பதால் 2 நாட்களுக்கு, காலை 11 மணி முதல், பிற்பகல் 3 மணி வரை  வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted