மதுரை, திருச்சி உட்பட 6 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் : வானிலை ஆய்வு மையம்

May 25, 2020 02:44 PM 958

வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தில் 19 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரிரு இடங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உட்பட 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மதுரை, திருச்சி, வேலூர், ராணிப்பேட்டை, கரூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted