தங்கப் பதக்கம் வென்று ஊர் திரும்பிய சிலம்பம் வீரர் வீரமணிகண்டனுக்கு உற்சாக வரவேற்பு

Oct 19, 2019 10:59 AM 462

மலேசியாவில் நடைபெற்ற உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த வீரமணிகண்டன் தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

மலேசியாவில் நடைபெற்ற முதல் உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில், புதுக்கோட்டை மாவட்டம் வேம்பங்குடி கிராமத்தை சேர்ந்த வீரமணிகண்டன் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பதக்கம் வென்ற பிறகு சொந்த ஊர் திரும்பிய வீரமணிகண்டனுக்கு, அவரது உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

உலகளவில் தான் வென்ற பதக்கத்தையும், கேடயத்தையும் மாவட்ட அட்சியரிடம் காண்பித்து, வீரமணிகண்டன் வாழ்த்துப் பெற்றார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய வீரமணிகண்டன், உலகக் கோப்பையில் சிலம்பப் போட்டியை சேர்க்கும் பட்சத்தில், அதில் கலந்துக் கொண்டு தங்கம் வெல்வதே தனது இலக்கு எனக் கூறினார்.

Comment

Successfully posted