நாமக்கலில் சமூக நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

Sep 07, 2019 03:18 PM 152

நாமக்கல் மாவட்டத்தில் சமூக நலத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.


பள்ளிபாளையத்தில் சமூக நலத்துறை சார்பில் குமாரபாளையம் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம், பள்ளிபாளையம் நகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம், உபகரணங்கள் தேர்வு மதிப்பீடு செய்தல் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜா கலந்துகொண்டனர். இதனையடுத்து முகாமில் பேசிய அமைச்சர் தங்கமணி, அரசின் நலத்திட்ட உதவிகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அதற்கான தீர்வு உடனடியாக எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Comment

Successfully posted