சாலையில் சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞருக்கு அடி உதை

Dec 02, 2019 07:04 PM 415

மேற்குவங்க மாநிலம் அசன்சோலில் பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்த இளைஞரை அப்பகுதி மக்கள் அடித்து உதைத்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அசன்சோலில் சாலையில் நடந்துசென்ற பெண்ணைப் பின்தொடர்ந்த ஒருவர் அவரிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து அப்பகுதியில் உள்ளவர்களிடம் அந்தப் பெண் தெரிவித்தார். இதையடுத்ப் பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரைச் சூழ்ந்துகொண்ட அப்பகுதி மக்கள் தாறுமாறாக அடித்து உதைத்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Comment

Successfully posted