மேற்கு வங்க மாநிலத்தில், 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது

Apr 26, 2021 08:33 AM 263

மேற்கு வங்க மாநிலத்தில் 34 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

 

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.

இதுவரை முடிந்த 6 கட்ட தேர்தலில் 222 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது.

இந்த நிலையில், 7 ஆம் கட்ட தேர்தல் இன்று நடைபெற உள்ளது. 7ஆம் கட்ட தேர்தலில் 34 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

7ஆம் கட்ட தேர்தலில் 12ஆயிரத்து 68 வாக்குச் சாவடிகளில் 86 லட்சத்து 78 ஆயிரத்து 221 பேர் வாக்களிக்க உள்ளனர்.

மொத்தம் 284 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில் அவர்களில் 26 சதவிகிதம் பேர் குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள் ஆவர்.

கொரோனா பரவல் காரணமாக தேர்தல் பிரசாரம் 72 மணி நேரத்திற்கு முன்பாகவே நிறுத்தப்பட்டது.

இதுவரை நடைபெற்ற 6 கட்ட தேர்தலிலும் வன்முறை சம்பவங்களால் நிக்ழந்ததால், 7 ஆம் கட்ட தேர்தலில் அசம்பாவிதங்களை தவிர்க்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Comment

Successfully posted