மேற்குவங்க எம்.எல்.ஏ படுகொலை : பாஜக பிரமுகர் மீது எப்.ஐ.ஆர் பதிவு

Feb 10, 2019 12:54 PM 181

மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பாஜகவை சேர்ந்த முகுல் ராய் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் புல்பாரியில் பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்ற திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் சத்யஜித் பிஸ்வாஸ், மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். மத்வா கம்யூனிட்டி தலைவராகவும் பிஸ்வாஸ் இருந்ததால் மேற்கு வங்கத்தில் பரபரப்பு நிலவுகிறது. இந்த நிலையில் இந்த கொலைக்கு பின்னால் பாஜக இருப்பதாக திரிணமுல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவராக விளங்கிய முகுல் ராய், சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். முகுல் ராய்க்கு, பிஸ்வாஸ் கொலையில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்படும் நிலையில் அவர் மீது எப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை மேற்கு வங்க பாஜக கடுமையாக மறுத்துள்ளது. இந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் இரண்டு பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Comment

Successfully posted