மே.இ.தீவுகள் அணி அபார ஆட்டம்: இந்திய அணிக்கு 208 ரன்கள் வெற்றி இலக்கு

Dec 06, 2019 09:05 PM 931

இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர் முடிவில் 207 ரன்கள் எடுத்துள்ளது.

பொல்லார்ட் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 இருபது ஓவர் தொடர் மற்றும் 3 ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. இதில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் முதல் டி20 போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங்கை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்தனர். அதிகபட்சமாக அந்த அணியின் இளம் வீரரான ஹெட்மியர் 56 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் சஹால் 2 விக்கெட்டும், தீபக் சஹார், வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதனையடுத்து, 208 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

Comment

Successfully posted