இந்தியாவுடன் விளையாடுவது அற்புதமான வாய்ப்பு: கேன் வில்லியம்சன்

Feb 13, 2020 11:37 AM 642

உலகின் நம்பர் ஒன் அணியை எதிர்கொள்ள முழு அணியுடன் களம் இறங்குவோம் என கேன் வில்லியம்சன் நம்பிக்கையை  தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 தொடரை இந்தியா 5-0 எனக் கைப்பற்றியது. இதனால் நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரிலும் மோசமாக விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் வேகப்பந்து வீச்சாளர்களான டிரென்ட் போல்ட், பெர்குசன், மேட் ஹென்றி இல்லாமல் களம் இறங்கியது. இருந்தாலும் சிறப்பாக விளையாடி இந்தியாவை 3-0 என வீழ்த்தி அசத்தியது.

இந்நிலையில் இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உடற்தகுதி பெற்று விடுவார்கள் என்று நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கேன் வில்லியம்சன் கூறுகையில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்குள் அனைத்து வீரர்களும் உடற்தகுதி பெற்று விடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். உலகின் சிறந்த அணிக்கெதிராக விளையாட இருப்பது அற்புதமான வாய்ப்பு.

வீரர்கள் காயம் அடைவது விளையாட்டின் ஒரு பகுதிதான். சமீப காலமாக நாங்கள் வீரர்கள் காயத்தால் மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளோம். ஆனால், அதை ஒரு காரணமாக சொல்லக்கூடாது  என்றும் கேன் வில்லியம்சன் தெரிவித்தார்.

Comment

Successfully posted