சூப்பர் ஸ்டார் என அரசியலுக்கு வரும் நடிகர்கள் என்ன செய்தார்கள்? அமைச்சர் கேள்வி

Dec 13, 2020 04:51 PM 239

சூப்பர் ஸ்டார் என சொல்லிக்கொண்டு அரசியலுக்கு வரும் நடிகர்கள், கொரோனா காலத்தில் இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் ஏதாவது கொடுத்தார்களா என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

விழுப்புரம் மாவட்ட அதிமுக மகளிர் அணி, இளைஞர், இளம்பெண்கள் பாசறை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாத நடிகர்கள், அரசியலுக்கு வந்து என்ன செய்துவிட போகிறார்கள் என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், பெண்கள் தான் அதிமுகவின் தூண், பெண்கள் முடிவு செய்துவிட்டால் அதிமுக வெற்றியை யாராலும் அசைக்க முடியாது என தெரிவித்தார்.

Comment

Successfully posted