'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தில் விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் என்ன தெரியுமா.?

Nov 18, 2019 11:59 AM 367

சங்கத்தமிழன் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி, 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். 


தமிழ் திரைப்படத்துறையில் யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் விஜய்சேதுபதி , இவரின் ‘சங்கத் தமிழன்’ படம் நவம் 16 ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் விஜய்சேதுபதியின்அடுத்த படமான 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தை அறிமுக இயக்குநரான வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்குகிறார்.

இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். கனிகா, ரித்விகா, சிவரஞ்சினி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதல், இசை ஆகிய கொண்டாட்டங்களை உள்ளடக்கிய கதையாக மற்றும் ஒரு சர்வதேசப் பிரச்சனையை பற்றி பேசும் படமாக அமையலாம் என கூறப்படுகிறது.மேலும் இப்படத்தில் இசைக்கலைஞர் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted