மெரினா கடற்கரையில் மக்களை அனுமதிப்பது எப்போது? - தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

Sep 29, 2020 05:52 PM 470

மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தக் கோரி, பீட்டர் ராயன் என்பவர் தொடர்ந்த வழக்கில், நீதிபதிகள் தாமாக முன்வந்து மெரினா பராமரிப்பு குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, கடற்கரைகளில் பொதுமக்களை அனுமதிப்பது என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால், அந்த விவகாரத்தில் நீதிமன்றம் அழுத்தம் தர முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது குறித்து அரசே முடிவெடுத்து, அடுத்த மாதம் 5-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும், மெரினா கடற்கரையில் தள்ளுவண்டி கடைகளுக்கான டெண்டர் நடைமுறை விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Comment

Successfully posted