சவுதி எண்ணெய் ஆலைத் தாக்குதலுக்குப் பின்னனியில் யார்?- ஆதாரத்துடன் நிரூபித்த சவுதி அரேபியா

Sep 20, 2019 12:11 PM 390

சவுதி எண்ணெய் ஆலைத் தாக்குதலுக்குப் பின்னால் உள்ளது யார் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளது சவுதி அரேபியா. தாக்குதலின் பின்னணியில் உள்ளது யார்?

சவுதி அரேபியா தலைநகர் ரியாத்திலிருந்து 330 கி.மீ. தொலைவில் உள்ளது அப்கைக் என்னும் இடம். இங்குள்ள அரம்கோ நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் குராய்ஸ் எண்ணெய் வயல் மீது கடந்த செப்டம்பர் 14-ம் தேதி ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் கச்சா எண்ணெய் நிறுவனம் முற்றிலுமாக சேதமடைந்த்து. மேலும், இதனால் ஏற்றுமதியில் பெரும் பின்னடைவை சந்திக்க வேண்டிய சூழல் சவுதி அரேபிய நாட்டிற்கு ஏற்பட்டது.

இந்நிலையில் இந்தத் தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம்' என ஆதாரங்களுடன் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது சவுதி அரேபியாவின் பாதுகாப்புத் துறை. சவுதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ட்ரோன் மற்றும் ஏவுகணைகளின் பாகங்களை காட்சிப்படுத்தியுள்ளது சவுதி பாதுகாப்புதுறை. இந்த தாக்குதலுக்கு ஈரான் உதவியுள்ளதாகவும், அதற்கான அனைத்து ஆதாரமும் தங்களிடம் உள்ளதாகவும் சவுதியின் பாதுகாப்பு துறை கூறியுள்ளது. ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் சரியாக எங்கிருந்து ஏவப்பட்டன, என்பது தொடர்பான ஆராய்ச்சிகளில் தற்போது சவுதி நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஏவுகணை ஏவப்பட்ட இடம் எது என்ற துல்லிய விவரம் விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்றும் , அதன் பின்னர் உரிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் சவுதி பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் அல்-மால்கி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Comment

Successfully posted