இன்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போவது யார்?

Aug 18, 2019 05:36 PM 353

இன்று பிக்பாஸ் வீட்டின் 56வது நாள்.போட்டியாளர்கள் சோர்ந்து போய் இருந்த நேரத்தில் வீட்டின் விருந்தாளியாக வனிதா வந்தார்.வந்ததும் தான் ஒரு விருந்தாளி என்பதை மறந்து சக போட்டியாளருடன் சேர்ந்து தனது ஆட்டத்தை ஆட தொடங்கிவிட்டார்.முடிந்து போன அபிராமி-முகென் பிரச்சனையை மீண்டும் ஆரம்பித்தார்.இதனால் சாண்டி, கவின்,தர்ஷன் ஆகியோர்களுடன் சில சச்சரவுகள் ஏற்பட்டது.

நேற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து மதுமிதா வெளியேற்றப்பட்டார்.டாஸ்க்கிற்கு பிறகு நடந்த விவாதத்தில் தன்னை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக மதுமிதா தன் கையை அருத்துகொண்டார்.அப்படி நடந்து கொண்டது பிக்பாஸ் வீட்டின் விதியை மீறுதல் எனக்கூறி வீட்டிலிருந்து மதுமிதா உடனடியாக வெளியேற்றப்பட்டார்.

இன்றைய பிக்பாஸ் ப்ரோமோவில் கமல், உணர்ச்சிகள் கட்டுப்படுத்தபட வேண்டும், உணர்ச்சிகள் நம்மை கட்டுப்படுத்த கூடாது என கூறுகிறார்.கடந்தவாரம் உணர்ச்சிகள் பற்றி அவர் அதிகமாக பேசியது அபிராமியிடம் தான்.எனவே அபிராமி வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இரண்டாவது ப்ரோமோவில் கமல் வனிதாவிடம் ஏன் நீங்க திருப்பி வந்தீங்க என கேட்க, வனிதாவோ ஏதோ ஒரு விதத்தில் மக்கள் என்ன மிஸ் பண்ணாங்க என கூற, உடனே அரங்கமே சிரிக்க தொடங்கியது.மூன்றாவது ப்ரோமோவில் கஸ்தூரி வனிதாவை கிண்டல் செய்ய, வனிதா என்ன செய்வது என தெரியாமல் முழிக்கிறார்.

இன்று பிக்பாஸ் வீட்டிலிருந்து அபிராமி வெளியேற்றப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Comment

Successfully posted