துணை முதலமைச்சராக இருந்த போது ஸ்டாலின் ஏன் வெளிநாடு சென்றார்?: அமைச்சர் ஜெயக்குமார்

Sep 11, 2019 09:38 PM 128

சென்னை திருவொற்றியூரில் 200 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மீன்பிடித் துறைமுகம் கட்டும் பணிக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அடிக்கல் நாட்டினார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசுகையில், கருணாநிதி எதற்காக சிங்கப்பூர் சென்றார் என்றும், துணை முதலமைச்சராக இருந்த ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு சென்றதற்கான காரணங்களை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், கூவ ஆற்றை சுத்தம் செய்ய ஸ்டாலின், வெளிநாட்டிற்கு சென்றதால் கூவம் சுத்தம் அடைந்ததா? என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட அந்நிய முதலீடுகளை பாராட்டி எதிர்க்கட்சி தலைவர் விழா எடுப்பதே ஆரோக்கியமான அரசியல் என்றும் அவ்வாறு செய்தால் உலக அரங்கில் தமிழக அரசியல் கட்சிகளின் நிலை உயரும் எனவும் அவர் கூறினார்.

Comment

Successfully posted