கள்ளக் காதலியுடன் சிக்கிய திமுக பிரமுகர் மீது மனைவி புகார்

Jun 03, 2021 10:26 PM 1284

வேலூர் மாவட்டம் குடியாத்தம், பிச்சனூர் பேட்டை ஆர்.எஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் 39 வயதான சுந்தர். இவர் வேலூர் மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளாராக பதவி வகித்து வருகிறார். மேலும், பைனான்ஸ் மற்றும் ஷூ தொழிற்சாலை ஒன்றையும் நடத்திவருகிறார்.


இவரும், குடியாத்தம் நெல்லூர்பேட்டை பச்சையப்பன் நகர் பகுதியை சேர்ந்த 33 வயதான வித்யா என்பவரும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து, கடந்த 2014 -ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் திருமணமான நாள் முதல், திமுக பிரமுகர் சுந்தர் தன்னுடைய மனைவியிடம் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார்.

மேலும், திமுக பிரமுகர் சுந்தருக்கு பல பெண்களுடன் தகாத உறவு இருந்ததால், அது குறித்து அவருடைய மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இதனால், சுந்தரும், வித்யாவும் தனிக்குடித்தனம் சென்ற நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக சுந்தர் வீட்டிற்கு வருவதை நிறுத்தியுள்ளார். அதோடு, தன்னை பற்றி காவல் நிலையத்திலோ அல்லது வெளியில் யாரிடமாவது புகார் கொடுத்தால், கொலை செய்து விடுவதாக மனைவிக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

வீட்டிற்கு வராத சுந்தர் குறித்து விசாரித்து, அவர் வசிக்கும் மற்றொரு வீட்டிற்கு குடும்பத்தோடு சென்று பார்த்தபோது, அவர் கள்ளக்காதலியுடன் ஒன்றாக இருந்ததை கண்டு வித்யா அதிர்ந்துபோனார்.

இதுகுறித்து குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வித்யா புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் துறையினர், சுந்தர் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comment

Successfully posted