கருப்பு பூஞ்சை தொற்றால் பாதித்த கணவருக்கு உரிய சிகிச்சை அளிக்கவேண்டும் என மனைவி கதறல்

May 21, 2021 12:43 PM 788

மேட்டூர் அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட
கணவருக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்க மறுப்பதாக கூறி மனைவி கதறும்
வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கொரானா நோய்தொற்று பாதிக்கப்பட்டவருக்கு கடந்த சில நாட்களாக கருப்பு பூஞ்சை
நோய் தொற்றால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டம்
,எடப்பாடியை சேர்ந்த தனபால் (47), கருப்பு பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்டு
மூன்று நாட்களுக்கு முன்புசிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் உள்ள
கொரானா வார்டில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அவரது மனைவி செண்பகம்
சமூக வலைதளங்களில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .அதில் தனது
கணவருக்கு கொரானா நோயால் கருப்பு பூஞ்சை தொற்று பாதிக்கப்பட்டு கண்களில்
ரத்தம் வருவதாக தெரிவித்தார். மேலும் மருத்துவர்கள் உரிய சிகிச்சை
அளிப்பதில்லை என்று குற்றம் சாட்டு தெரிவித்துள்ளார். உயிருக்கு ஆபத்தான
நிலையில் உள்ள தனது கணவரை காப்பாற்றும்படி கோரிக்கை வைத்துள்ளார். இந்த வீடியோ
சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது .
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில் மேட்டூர் அரசு மருத்துவமனையில்
கருப்பு பூஞ்சை நோய் தொற்றுக்கு போதிய மருத்துவ வசதி இல்லாததால் சேலம் மாவட்ட
அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தனர்.

Comment

Successfully posted