உணவு தேடி இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை

Dec 02, 2019 12:18 PM 217

கோவை மாவட்டம் தாளியூர் பகுதியில் காட்டு யானை ஒன்று உணவு தேடி இரவு நேரத்தில் ஊருக்குள் வந்ததால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்தனர்.


தாளியூர் பகுதியில் உள்ள நாகராஜ் என்பவர், இரவு தூங்கி கொண்டிருந்த போது, வீட்டின் பின்புறம் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அவர் எழுந்து சென்று பார்த்தபோது காட்டு யானை ஒன்று வீட்டின் பின்பக்கம் தொட்டியில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. இதனைக் கண்டு அதிச்சியடைந்த அவர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், விரைந்து வந்த வனத்துறையினர் அந்த காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இரவு நேரத்தில் காட்டு யானை ஒன்று ஊருக்குள் வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Comment

Successfully posted