வீடுகளையும் கடைகளையும் சேதப்படுத்தும் காட்டு யானைகள்

Aug 24, 2021 03:37 PM 528

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே யானைகள் வீடுகளை இடித்து சேதப்படுத்தியதால், வீட்டிற்குள் இருந்தவர்கள் குழந்தைகளுடன் தப்பிச் சென்று உயிர் பிழைத்தனர்.

நாடுகாணி, தேவால, புளியம்பாறை, ஆமைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு காட்டு யானைகள் அவ்வப்போது வீடுகள் மற்றும் கடைகளை சேதப்படுத்தி வருகிறது.


இந்த யானைகளை வனத்திற்குள் விடுமாறு 500க்கும் மேற்பட்டோர் நேற்று சாலை மறியல் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நாடுகாணி பகுதியில் ரங்கராஜ் என்பவரது வீட்டை நள்ளிரவில் யானைகள் இடித்து சேதப்படுத்தின.

இதனால் அச்சமடைந்த ரங்கராஜ், மனைவி மற்றும் மகன், மருமகள், பேரக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு அருகிலிருந்த வீட்டில் தஞ்சம் அடைந்து உயிர் தப்பினர்.

யானைகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கவலையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comment

Successfully posted